சேனையூர் மத்திய கல்லூரி மூதூர் கிழக்கில் சேனையூர்,கடைபறிச்சான் கிராமங்களுக்கு மத்தியில் அமந்துள்ளது.1957ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை மிகக்குறுகிய காலத்தில் துரித வளற்சி கண்டது.இதன் முதல் அதிபராக திரு ஞானமுத்து அவர்கள் கடமை ஏற்றார்கள்.தொடர்ந்த்து திரு நடராசா அவர்கள் கடமை ஏற்று கிடத்தட்ட பத்துவருசங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்.பத்துஅண்டுகளில் மூதூரில் முதல் தர பாடசாலையாக மாறியது. கல்வி,விளையாட்டு,கலை என எல்லாத்துறகளிலும்.குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது.1968 ம் ஆண்டு மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.இக்கலத்தில் தொழிற்பட்ட பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் பங்கு முக்கியமானது.திரு நடராசா அதிபர் அவர்கள் ஊரவர்களுடன் இணைந்து படசாலயின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார் அவரோடு ஊரவர்களான திரு மார்க்கண்டு,கதிர்காமத்தம்பி,பாலசிங்கம்,கோணேசபிள்ளை,முதல் பலரும் இதில் பங்கு கொண்டனர்.
1968ல் இடைக்காடு ஆறுமுகம் அவர்கள் அதிபர் ஆனார்கள்.1971ல் தம்பலகாமம் திரு கணேசபிள்ளை அவர்கள் அதிபராக பொறுப்பேற்று 1973 வரை சிறப்பாக பணியாற்றினார்கள்.1973ல் திரு செ.கதிர்காமத்தம்பி அவர்கள் அதிபராக கடமையேற்று1983 வரை மிகச்சிறப்பக கடமையாற்றினார்கள்.
1974ல் க.பொ.த உயர் தரம் அரம்பிக்கப்பட்டது கலப்பிரிவு மிகுந்த போராட்டத்துக்கு மத்தியிலேயே தொடங்கப்பட்டாலும் முதல் முறையிலெயே புதிய சாதனையயை படைத்து திருகோனணமலை மாவட்டத்தில் முதல் தர பாடசலை என்ற பெருமயயை பெற்றது.மூதூர் தொகுதியின் எல்லா பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வரத்தொடங்கினர்.
1983ல் வெள்ளிவிழாக்கொண்டாடிய பாடசாலை திருக.துரைரெட்டினசிங்கம் அவர்களை அதிபராகப் பெற்றது முதல் முதலாக சொந்த ஊரவரே அதிபராகியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இக்காலத்தில் அகிலஇலங்கை மட்டத்தில் சாதனைகள் நிகள்த்தப்பட்டன.விஞ்ஞானப்பிரிவு,வர்த்தகப்பிரிவு எனவளர்ந்து மத்தியமகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.
இன்று ஐம்பது ஆண்டுகளை கடந்து பொன்விழாக்கொண்டாடும் வித்தியாலய வளர்ச்சியில் பங்குகொண்ட முக்கியமான பலரை நாம் மறந்து விட முடியாது.
திருவாளர்கள் வ.அ.இராசரெத்தினம்,தா.ஜெயவீரசிங்கம்,செ.விபுணசேகரம்,கா.ஜீவரெத்தினம்,க.ஜீவரெத்தினம்
என இந்த படியலை நீட்டிக்கொண்டே போகலாம்.
இன்று அதிபராக இருக்கின்ற திரு .இரத்தினசிங்கம் இந்தப் பாடசாலையின் பழய மாணவர்.
யுத்தத்தின் கோரம் பாடசாலையை சின்னாபின்னமாக்கிவிட்டது.உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற சேனயூர் மத்திய கல்லூரியின் பழய மாணவர்கள்
இதில் கவனம் செலுத்துங்கள்.
சேனையூர்-கட்டைபறிச்சான் வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ் மக்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்ற பண்டைய தமிழ் கிராமம்.அழிவுகளின் மத்தியிலும் புதிதாய் எழுகிறது .
Friday, 15 February 2008
சேனையூர்
சேனையூர் இன்று வெறிச்சோடிக்கிடக்கிறது எல்லாமக்களும் இன்று இடம்பெயர்ந்து அகதி முகாம்களில்.2006சித்திரை மாதம் இருப்பிடங்களை விட்டு ஓடத்தொடங்கியவர்கள் இன்றுவரை ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.வந்தோர்க்கெல்லாம் வாரிக் கொடுத்தவர்கள் இன்று மற்றவர்களிடம் கையேந்தவேண்டிய நிலை.ஈழத்தமிழர் பண்பாட்டின் முலக்கூறுகளைக் கொண்ட பழந்தமிழ்கிராமம்.
சேனையூரான்
சேனையூர் திருகோணமலை மாவட்டத்தில் மூதூரின் கிழக்கே அமந்துள்ள பாரம்பரியமான தமிழ் கிராமம்.கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்று ஆதாரங்களையும்,புராதன வாழ்வியல் கூறுகளையும் கொண்டுள்ளது.பிராமிக்கல்வெட்டுகளும்,நடுகற்களும்,கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களும்,சோழர்காலகல்வெட்டுக்களும்,ப்ழங்குடிகளின் வாள்விடங்களும்,பழமை மாறாத இசை நடன மரபுகளும்,தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளும் இந்த பிரதேசத்தின் பழமயை வலியுறித்தி நிற்கின்றன.
Subscribe to:
Comments (Atom)