சேனையூர் மத்திய கல்லூரி மூதூர் கிழக்கில் சேனையூர்,கடைபறிச்சான் கிராமங்களுக்கு மத்தியில் அமந்துள்ளது.1957ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை மிகக்குறுகிய காலத்தில் துரித வளற்சி கண்டது.இதன் முதல் அதிபராக திரு ஞானமுத்து அவர்கள் கடமை ஏற்றார்கள்.தொடர்ந்த்து திரு நடராசா அவர்கள் கடமை ஏற்று கிடத்தட்ட பத்துவருசங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்.பத்துஅண்டுகளில் மூதூரில் முதல் தர பாடசாலையாக மாறியது. கல்வி,விளையாட்டு,கலை என எல்லாத்துறகளிலும்.குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது.1968 ம் ஆண்டு மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.இக்கலத்தில் தொழிற்பட்ட பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் பங்கு முக்கியமானது.திரு நடராசா அதிபர் அவர்கள் ஊரவர்களுடன் இணைந்து படசாலயின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார் அவரோடு ஊரவர்களான திரு மார்க்கண்டு,கதிர்காமத்தம்பி,பாலசிங்கம்,கோணேசபிள்ளை,முதல் பலரும் இதில் பங்கு கொண்டனர்.
1968ல் இடைக்காடு ஆறுமுகம் அவர்கள் அதிபர் ஆனார்கள்.1971ல் தம்பலகாமம் திரு கணேசபிள்ளை அவர்கள் அதிபராக பொறுப்பேற்று 1973 வரை சிறப்பாக பணியாற்றினார்கள்.1973ல் திரு செ.கதிர்காமத்தம்பி அவர்கள் அதிபராக கடமையேற்று1983 வரை மிகச்சிறப்பக கடமையாற்றினார்கள்.
1974ல் க.பொ.த உயர் தரம் அரம்பிக்கப்பட்டது கலப்பிரிவு மிகுந்த போராட்டத்துக்கு மத்தியிலேயே தொடங்கப்பட்டாலும் முதல் முறையிலெயே புதிய சாதனையயை படைத்து திருகோனணமலை மாவட்டத்தில் முதல் தர பாடசலை என்ற பெருமயயை பெற்றது.மூதூர் தொகுதியின் எல்லா பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வரத்தொடங்கினர்.
1983ல் வெள்ளிவிழாக்கொண்டாடிய பாடசாலை திருக.துரைரெட்டினசிங்கம் அவர்களை அதிபராகப் பெற்றது முதல் முதலாக சொந்த ஊரவரே அதிபராகியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இக்காலத்தில் அகிலஇலங்கை மட்டத்தில் சாதனைகள் நிகள்த்தப்பட்டன.விஞ்ஞானப்பிரிவு,வர்த்தகப்பிரிவு எனவளர்ந்து மத்தியமகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.
இன்று ஐம்பது ஆண்டுகளை கடந்து பொன்விழாக்கொண்டாடும் வித்தியாலய வளர்ச்சியில் பங்குகொண்ட முக்கியமான பலரை நாம் மறந்து விட முடியாது.
திருவாளர்கள் வ.அ.இராசரெத்தினம்,தா.ஜெயவீரசிங்கம்,செ.விபுணசேகரம்,கா.ஜீவரெத்தினம்,க.ஜீவரெத்தினம்
என இந்த படியலை நீட்டிக்கொண்டே போகலாம்.
இன்று அதிபராக இருக்கின்ற திரு .இரத்தினசிங்கம் இந்தப் பாடசாலையின் பழய மாணவர்.
யுத்தத்தின் கோரம் பாடசாலையை சின்னாபின்னமாக்கிவிட்டது.உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற சேனயூர் மத்திய கல்லூரியின் பழய மாணவர்கள்
இதில் கவனம் செலுத்துங்கள்.
1 comment:
திரு பாலசிங்கம் சுகுமார் ஆகிய நீங்கள் இவ்வலையத்தளத்தினூடாக தங்கள் விருப்பத்துக்குரியவர்களையும் உங்கள் சொந்த மண்ணையும் பெருமைகூறுவதில் தவறில்லை சில விடயங்கள் மிகைப்படுத்தலாகக்கூட இருப்பது பலரின் அவதானம் அதிலும் எனக்கு கவலையில்லை ஆனால் ஒருவிடயத்தை நீங்கள் திட்டமிட்டே மறைக்க முயற்சிக்கிறீர்கள் அல்லது திட்டமிட்டே திரிபுபடுத்தி எழுதுகிறார்கள் என்பதை நீங்களும் ஊரில் பலரும் நீங்களும் நன்கறிவீர்கள்.அதில் ஒன்றுதான் மூதூர் கிழக்கில் கட்டைபறிச்சான் சேனையூர் இணைந்திருந்த அப்போதைய கிராமோதய சபை எல்லைக்குட்பட்ட கிராமத்தில் முதலாவது ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றியவர் செல்வி.மனோன்மணி செல்லப்பாக்கியம் (திருமதி.மனோன்மணி வர்ணகுலநாதன். ராஜேஸ்வரி அக்கா என்றும் அழைக்கப்படுபவர்)இவர் நியமனம் பெற்ற திகதி 01.09.1957.ஆகும் . உங்களால் குறிப்பிடப்படும் ஆசிரியர் 1961ம் ஆண்டுக்கு பின்னரே நியமனம் பெற்றார் என்பதையும் தாங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை ஆயினும் இதுவரை உங்களால் அவரின் நியமனத்திகதி தொடர்பாக உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் பதிலளிக்கவில்லை .தகவலை திரிபுபடுத்தி பதிவிடுவதில் தங்களுகளுக்கு என்ன ஆனந்தம். தாங்கள் திருமதி மனோன்மணி வர்ணகுலநாதன்( மனோன்மணி செல்லப்பாக்கியம்)தான் கிராமத்தின் முதலாவது ஆசிரியர் என்பதைக்குறிப்பிடுவதில் ஏதாவது தனிப்பட்ட முன்விரோதங்கள் இருக்கின்றது அல்லது அவரைப்பெருமைப்படுத்துவதில் தங்கள் சகிப்புத்தன்மையை இழக்க நேரிடுகிறதா? அவ்வாறானின் தாங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் சிறந்த தரவுகள் அடிப்படையில் ஆக்கங்களை பதிவிட முடியாத ஒருவராகவே இருப்பீர்கள் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.வயதில் மூத்தவர் கல்வி சார் பட்டங்களைப்பெற்றவர் நீங்கள் வாழுங்காலத்தில் மாத்திரமல்ல மறைவின் பின்னரும் பாலசுகுமாரின் ஆக்கங்கள் ஆதாரமானவை பெறுமதி மிக்கவை என்ற நோக்கில் தேடிக்கற்கும் நிலை உருவாக வேண்டும் அதுவே உங்களுக்கு பெருமை எனக்கருதுகிறேன்.தவறை உணர முன்வருவது பொருத்தமானது.
Post a Comment